மிரட்டலாக உருவாகியுள்ள ‘ருத்ரன்’... ராகவா லாரன்ஸ் படத்தின் சென்சார் தகவல் !

Rudhran

 ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடன இயக்குனராக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன். வில்லனாக நடிகர் சரத்குமார் மிரட்டலாக லுக்கில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பூர்ணிமா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Rudhran

பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் அட்டகாசமாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸின் வழக்கமாக ஆக்‌ஷன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

Share this story