ரீமிக்ஸாகியுள்ள 60-களின் சூப்பர் ஹிட் பாடல்... லாரன்ஸின் சூப்பர் ஸ்டைலில் ‘ருத்ரன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் !

Rudhran

ராகவா லாரன்சின் ‘ருத்ரன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்‘. பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Rudhran

ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம்  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மிரட்டும் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் தரண்குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வழக்கமான பாடல் போன்று இல்லாமல் 60-களில் பிரபலமான ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடலின் ரீமேக்காக உருவாகியுள்ளது. நித்யஸ்ரீ பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story