“ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பெயரை யூகியுங்க”... ரசிகர்களுக்கு ‘ருத்ரன்’ படக்குழு வைத்த ட்விஸ்ட் !

Rudhran

 ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Rudhran

பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் மிரட்டும் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 

Rudhran

இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது.   இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

Rudhran

இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ஃப்ர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பெயரை யூகியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதனால் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 


 

Share this story