ஓடிடியில் வெளியாகும் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்'... எப்போது தெரியுமா ?

rudhran

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'ருத்ரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

 பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் வில்லனாக நடிகர் சரத்குமார் மிரட்டலாக லுக்கில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பூர்ணிமா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

rudhran

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஜிவி இசையில் உருவான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ‌ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷனில் இப்படம் உருவாகி வெளியானது. 

கடந்த மாதம்‌ ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் வெளியான இப்படம் கவவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மே 14-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. 

Share this story