அடித்து துவம்சம் செய்யும் ராகவா லாரன்ஸ்.. ‘ருத்ரன்‘ டிரெய்லர் வெளியீடு !

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
விறுவிறுப்பான ஆக்ஷன் அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். வில்லனாக நடிகர் சரத்குமார் மிரட்டலாக லுக்கில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பூர்ணிமா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் அட்டகாசமாக உருவாகியுள்ளது.
இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனல் பறக்கும் வசனங்களுடன் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.