‘பாடாத பாட்டெல்லாம்’... ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

Rudhran

ராகவா லாரன்ஸின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்ட ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம்  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. 

Rudhran

இந்த படத்தில் மிரட்டும் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பாடாத பாட்டெல்லாம் என்று தொடங்கும் இந்த பாடல் ரீமிக்சில் உருவாகியுள்ளது. இந்த பாடல் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்ககது. 

 

Share this story