ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்திற்கு தடை ?... கவலையில் படக்குழுவினர் !

rudhran

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மிரட்டலான கதைக்களத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம்  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. 

rudhran

இந்த படத்தின் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை ரெவன்சா குளோபல் வென்சர்ஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த டப்பிங் உரிமைக்கு கூடுதலாக 4 கோடியே 50 லட்சம் கேட்ட தயாரிப்பு நிறுவனம், திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்ததது. 

 இந்நிலையில் திட்டமிட்ட படத்தை வெளியிட அனுமதித்தால் தங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 24-ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இந்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். 

 

 

Share this story