மிரட்டலான உருவாகியுள்ள ‘பகை முடி’ பாடல்.. ‘ருத்ரன்’ இரண்டாவது பாடல் வெளியீடு !

rudhran

‘ருத்ரன்’ படத்திலிருந்து ‘பகை முடி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

ஹாரர் மற்றும் த்ரில்லர் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறார் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

rudhran

இதையொட்டி அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘பாட்டு பாடவா’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து ‘பகை முடி.. வலி கொடுத்தவன் கதை முடி’ என்ற மிரட்டலான இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் கருணாகரன் எழுதிய இந்த பாடலை திவாகர் கர்ஜிக்கும் குரலில் பாடியுள்ளார். இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

rudhran

பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம்  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story