ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன்’... படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்

rudhran

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல சினிமா பட தயாரிப்பாளராக ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் இயக்குனராக உருவெடுத்துள்ள திரைப்படம் ‘ருத்ரன்’.  ராகவா லாரன்ஸ் மிரட்டல் தோற்றத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு  இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். 

rudhran

மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

rudhran

ஜிவி பிரகாஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சில முக்கிய பகுதி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story