ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாகும் நயன்தாரா... ஹாரர் காமெடி உருவாகும் புதிய படம் !

lawrene and nayanthara

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ், முழு நேர நடிகராக மாறி கலக்கி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையடுத்து ‘சந்திரமுகி 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். 

lawrene and nayanthara

இந்த படத்திற்கு பிறகு ஜிகர்தாண்டா 2, அதிகாரம் ஆகிய இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்து ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரத்னகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

lawrene and nayanthara

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்த அவர், தற்போது மீண்டும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 


 

Share this story