இந்தி திணிப்பை பற்றிய படம் – எப்படி இருக்கிறது ‘ரகு தாத்தா’- ரசிகர்கள் விமர்சனம்

Ragu thatha

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் ‘ரகு தாத்தா’. இப்படத்தை புது இயக்குனர் சுமன் குமார் இப்படத்தை இவர் ஏற்கனவே தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் கதை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

படத்தில் 1970களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக இருக்கிறார் கயல்விழி(கீர்த்தி சுரேஷ்). சிறுவயதிலிருந்தே ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடும் இவர் தனது ஊரில் உள்ள ஏக்தா சபாவை மூடுகிறார். மேலும், தனது ஊரில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். வங்கியில் வேலை செய்யும் கயல்விழிக்கு திருமணம் முடிப்பதில் சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால், தனது தாத்தாவின் ஆசைக்காக கயல்விழி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். பின் வீட்டில் வரன் பார்க்க தொடங்கியவுடன், கயல்விழி நமக்குத் தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக, தான் நன்கு பழகிய தமிழ்ச்செல்வனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். - Advertisement - கடைசியில், தமிழ்செல்வனும் அனைத்து ஆண்களைப் போல பிற்போக்கு சிந்தனை கொண்டவர் என்று கயல்விழிக்கு தெரிய வருகிறது. அதனால் தமிழ்ச்செல்வன் இடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று கயல்விழி கல்கத்தாவிற்கு பணியிடை மாற்றம் செய்து கொண்டு போக முடிவு செய்கிறார். அதனால், தான் இத்தனை நாளாக எதிர்த்த ஹிந்தி பரிட்சையை எழுத முயற்சி செய்கிறார். கடைசியில், கயல்விழி தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள ஹிந்தி பயின்றாரா? இவர் இந்தி பயில்வது கிராம மக்களுக்கு தெரிய வந்ததா? கயல்விழிக்கு திருமணம் நடந்ததா? இல்லையா ?என்பது தான் மீதிக்கதை. 

ரசிகர்கள் விமர்சனம் இதோ.. 

Share this story