இசைக்கருவிகளே இல்லாமல் ஹிட்டடித்த பாடல் -ஏர் .ஆர் ரகுமானின் எந்த பாட்டு தெரியுமா ?

ஏ .ஆர் .ரகுமான் ரோஜா படத்தின் மூலம் இயக்குனர் மணி ரத்னம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ம்யூசிக் டைரெக்டராக அறிமுகப்படுத்தப்பட்டார் .அவர் இதற்கு முன்பு கீ போர்டு பிளேயராக பல நூறு படங்களில் பணியாற்றியுள்ளார்
ஏ .ஆர் .ரகுமானுக்கு திருடா திருடா படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் அதன் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இப்படத்தில் தான் எந்தவித இசைக்கருவிகளும் பயன்படுத்தாமல் ஒரு பாடலை கம்போஸ் செய்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். அவரின் இந்த முயற்சியை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே ரகுமானை பாராட்டி இருந்தது. அவரின் கெரியரில் சிறந்த பாடலாகவும் அது திகழ்ந்தது. அப்படி ரகுமான் இசைக்கருவிகளே இல்லாமல் உருவாக்கிய அந்தப் பாடல் வேறெதுவுமில்லை... திருடா திருடா படத்தில் இடம்பெறும் ‘ராசாத்தி என் உசுரு எனதில்ல’ என்கிற பாடல் தான்
ரோஜா படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் ஏ.ஆர்.ரகுமானும், மணிரத்னமும் மீண்டும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் திருடா திருடா. டாப் ஸ்டார் பிரசாந்த் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அனு அகர்வால், எஸ்பிபி, ஹீரா, சலீம் கோஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ஸுக்கான தேசிய விருதை திருடா திருடா திரைப்படம் தட்டிச் சென்றது.