"ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"-ஆர்யா மறுப்பு

arya

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டலில்  ரெய்டு நடப்பதாக செய்தி வந்த நிலையில் .அந்த ஹோட்டல் தன்னுடையது இல்லை என்று ஆர்யா மறுத்துள்ளார் 
நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘நான் கடவுள்’, ‘மதராசபட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவருக்கு எந்த படங்களும் அமையவில்லை. தற்போது கைவசம் ‘அனந்தன் காடு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமானதென கூறப்படும் சீ ஷெல் (sea shell) உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது  
இந்நிலையில், சென்னையில் தனக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.
"ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ரெய்டு நடக்கும் ஓட்டல் வேறு ஒருவருடையது" என ஆர்யா கூறி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர்யாவிடமிருந்து குன்ஹி மூசா என்பவர் இந்த உணவகங்களை வாங்கியிருப்பதாக தெரிகிறது.

Share this story