தாறுமாறாக வெளியான ‘ரெய்டு’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல்.

photo

நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’. இந்த படத்திற்கு பிரபல இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார், இயக்குநர் கார்த்தி படத்தை இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘டகரு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் தயாராகி வருகிறது.

photo

கடந்த 2022 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு, டாணாகாரன் மற்றும் பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சினிமா பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஸ்ரீதிவ்யா நடிப்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.

photo

தற்போது படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலான ‘ என்ட்ட மாட்டாத..’ என தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது. பாடலை சிவம் பாடியுள்ளார், மோகன்ராஜா வரிகள் எழுதியுள்ளார். பாடல்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story