‘விக்ரம் பிரபு’வின் ‘ரெய்டு’ – புத்தாண்டு வாழ்த்துடன் வெளியான அசத்தல் போஸ்டர்.

photo

பிரபல இயக்குநர் முத்தையா வசனத்தில், இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘ரெய்டு’ இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கின்றனர். படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘டகரு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது.

photo

2022 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு, டாணாக்காரன் மற்றும் பொன்னியின் செல்வன்1 என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது சினிமா பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஸ்ரீதிவ்யா நடிப்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற அறிவிப்பிகள், துணை நடிகர் நடிகைகல் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story