‘ரெய்டு’ டீசரை வெளியிடும் STR... விக்ரம் பிரபு படத்தின் புதிய அப்டேட்

raid
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெய்டு’ படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனித்துவமான கதையில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘டாணாக்காரன்’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த வகையில் விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெய்டு’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கியுள்ளார். 

raid

இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. கதிரவன்‌ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் கிரீன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன‌. முழுக்க முழுக்க த்ரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இயக்குனர் முத்தையா கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

raid

கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை டீசரை நாளை நடிகர் சிம்பு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story