பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் சோதனை நிறைவு

dil raju

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் சோதனை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் வாரிசு, ராம் சரணின் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தில் ராஜு. விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தில் ராஜு. கடந்த 21-ம் தேதி காலை இவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தொடங்கினர்.

dil raju

ஐதராபாத்தில் உள்ள தில் ராஜுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 4 நாட்களாக நடந்த இந்த சோதனை இன்று நிறைவடைந்துள்ளது. இதில், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story