மீண்டும் தள்ளிப்போன ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி...!

raja kili

ராஜா கிளி படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக வலம் வருபவர்கள் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா. இவர்கள் இருவரும் ஏற்கனவே அப்பா , சாட்டை, விநோதய சித்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். இவர்களின் காம்போவில் வெளியான படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அடுத்தது இவர்கள் இருவரும் இணைந்து ராஜா கிளி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள நிலையில் நடிகர் தம்பி ராமையா படத்திற்கு கதை, வசனம் எழுதி இசையும் அமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸு க்கு தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதிக்கு இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் மீண்டும் ராஜா கிளி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் ட்ரைலர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி அந்த ட்ரெய்லரின் இறுதியில் இப்படமானது வருகின்ற டிசம்பர் மாதம் 13ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story