வாரணாசி படம் பற்றி இயக்குனர் ராஜமவுலி வெளியிட்ட முக்கிய தகவல்
வாரணாசி’ படக்குழுவினர், இதில் ருத்ரா என்ற கேரக்டரில் நடிக்கும் மகேஷ் பாபுவின் பிரத்யேக போட்டோக்களை வெளியிட்டனர். முதல் போட்டோ, அடர்ந்த வனப்பகுதியின் நடுவில், மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனத்தை ஈர்க்கும் தன்மையுடனும், அந்த கதாபாத்திரத்துக்குரிய அமைதியான தோற்றத்துடனும் காட்சி அளிக்கிறார். இரண்டாவது போட்டோ, நம்மை கென்யாவின் மாசாய் மாரா சமவெளிகளுக்கு அழைத்து செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள், வைல்ட்பீஸ்ட் விலங்குகளுக்கு நடுவில் நிற்கும் ருத்ரா, அதிகார தோரணையில் பின்னோக்கி பார்க்கிறார்.
இவ்விரு போட்டோக்களும் ‘வாரணாசி’ படத்தின் ஆன்மாவை ரசிகர்களுக்கு உணர்த்துகின்றன. இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறுகையில், ‘தன்னைவிட பெரியதொரு நோக்கத்தை நிறைவேற்றவே ருத்ரா பிறந்தான். தான் கேட்காத ஒரு விதியை சுமந்திருக்கும் அவன், நகைச்சுவை உணர்வு கொண்டவன், மென்மையானவன், மிகவும் கடுமையானவன். இதுபோன்ற பரிமாணங்களை மகேஷ் பாபு அந்த கேரக்டருக்குள் கொண்டு வந்தார். இந்த காட்சிகள் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்டவை.

