"மகேஷ் பாபு 200% உழைப்பைக் கொடுத்துள்ளார்" -வாரணாசி படம் பற்றி ராஜமவுலி

rajamouli

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ராஜமவுலி பேசுகையில், ‘‘ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய எங்களது புராணங்கள் இதுவரை திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் எனக்கு முழுத் திருப்தியை அளித்ததே இல்லை. அந்தப் புராணக் கதைகளை இன்னும் பிரமாண்டமான முறையில் ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவின் விளைவுதான் இந்த ‘வாரணாசி’. இந்தப் படத்தில் ராமாயணத்தைத் தழுவிய ஒரு பிரத்யேகக் காட்சி உள்ளது.
அந்த லுக்கில் மகேஷ் பாபுவைப் பார்த்தபோதே எனக்குச் சிலிர்த்துவிட்டது. பொதுவாகவே அவர் தன் 100% உழைப்பைக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்தப் படத்திற்காக அவர் தன் 200% உழைப்பைக் கொடுத்து என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாம் எதிர்பார்த்ததை விடவும் அந்தப் பாத்திரத்தை அவர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இந்தக் குறிப்பிட்ட ராமர் காட்சியை மட்டும் நாங்கள் சுமார் 60 நாட்கள் படமாக்கினோம். இது விஷுவல் ரீதியாக மட்டுமன்றி, உணர்ச்சிப்பூர்வமாகவும் ரசிகர்களைப் பெரிதும் தொடும்’’ எனப் பகிர்ந்திருக்கிறார்

Share this story