ஹாலிவுட் படங்களை மிஞ்சிய ‘ஆர்.ஆர்.ஆர்’... HCA விருதை வென்று சாதனை !

rrr

ஹாலிவுட் படங்களை மிஞ்சி HCA விருதை வென்று ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. 

இந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.  ராஜமௌலி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரம்மாண்டம், சண்டைக்காட்சி, கிராபிக்ஸ், திரைக்கதை என அனைத்தும் மிரள வைக்கும் வகையில் இருந்தது. 

rrr

ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் விருதுகளை குவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு இந்த படத்திற்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் எந்த பிரிவிலும் தேர்வாகவில்லை. ஆனால் சிறந்த பாடலுக்கான பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் மட்டும் நாமினேட்டாகி உள்ளது. அதனால் வரும் மார்ச் மாதம் நடைபெறும் விழாவில் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஹாலிவுட் அசோசியேஷன் சார்பில் HCA விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம், பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டது. அதன் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த ஸ்டண்ட் மற்றும் ஆக்ஷன் படமாக சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது போட்டியில் பல ஹாலிவுட் படங்கள் இருந்த நிலையில் அதையெல்லாம் முறியடித்து ஆர்.ஆர்.ஆர் இந்த விருதை கைப்பற்றியுள்ளது. 

 

 

Share this story