‘ஜேம்ஸ் கேமரூன்’ வார்த்தைகளில் திளைத்துப்போன ராஜமௌலி- ‘RRR’ படத்தை இத்தனை முறை பார்த்திருக்காரா!

photo

‘ஆர் ஆர் ஆர்’ படஇயக்குனரான ராஜமௌலி, ஜேம்ஸ் கேமரூனை சந்தித்த நிகழ்வையும் அவர்களது உரையாடல்களையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

photo

photo

கோலிவுட்டின் பிரம்மாண்டம் ஷங்கர் என்றால், டோலிவுட்டின் பிரம்மாண்டம்  ராஜமௌலி; இவரது இயக்கத்தில் நான் , பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட இந்த படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றது. ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியான கோல்டன் குளோப்ஸ் விருது பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


விருது விழாவில் கலந்து கொண்ட ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில்,  தற்போது இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமூக வலைதளத்தில், ஆர் ஆர் ஆர் படத்தை பிரபல ஹாலிவுட் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இரண்டு முறை பார்த்ததாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


 

இது குறித்து அவர் கூறியதாவது “ஆர் ஆர் ஆர்' படத்தை ஜேம்ஸ் கேமரூன் மிகவும் விரும்பியதால், தனது மனைவி சுஜிக்கு பரிந்துரைத்து அவருடன் இணைந்து  மீண்டும் படத்தைப் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு தன்னுடன் சுமார் 10 நிமிடங்கள் படம் குறித்து பகுப்பாய்வு செய்தார், இதனால் உற்சாகம் நிறைந்த பெரும்கடலாய் இருப்பதாக பதிவிட்டுள்ளார்” இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.  

Share this story