ராஜமௌலியுடன் கைகோர்க்கும் உலகநாயகன்.. உருவாகிறது மெகா கூட்டணி !

kamal

ராஜமௌலியுடன் உலகநாயகன் கமலஹாசன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் நெம்பர் இயக்குனராக இருப்பவர் ராஜமௌலி. ‘மகதீரா’ படத்தின் மூலம் பிரபலமான அவர், தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

kamal

இப்படி மிகவும் எதிர்பார்க்கும் இயக்குனராக உள்ள ராஜமௌலி, தற்போது மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் ராஜமௌலியும், உலகநாயகன் கமலஹாசனும் சந்தித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இருவரும் இணையும் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

kamal

‘விக்ரம்’ படத்திற்கு கமலின் படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்து மணிரத்னம், எச் வினோத், பா ரஞ்சித், வெற்றிமாறன் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story