“மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு… “- ரஜினிகாந்த் உருக்கம்.

photo

மறைந்த தனது நண்பர் விஜயகாந்தை பார்க்க கிளம்பிய ரஜினிகாந்த தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்” “விஜயகாந்த் இழப்பு துரதிஷ்டம் அவர் அசாத்திய மனஉறுதி கொண்ட மனிதர் .சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுகுழுவில் அவரை பார்த்த போது எனக்கு நம்பிக்கை கம்மியாகிவிட்டது. அவர் மட்டும் ஆரோக்கியமா இருந்திருந்தா தமிழக அரசியலே வேற மாதிரி இருந்துருக்கும் மிகப்பெரிய சக்தியாக இருந்துருப்பார். அந்த பாக்கியத்த தமிழக மக்கள் இழந்துட்டாங்க” என பேசியுள்ளார்.


தொடர்ந்து சென்னை வந்த ரஜினிகாந்த்” விஜயகாந்த் மதிரி இனி ஒரு மனிதரை பார்க்க முடியாது, அவரது இழப்பு ஈடுகட்ட முடியாத இழப்பு” என தனது நண்பர் குறித்து கூறியுள்ளார்.

Share this story