ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர் ... 'தலைவர் 170' புதிய அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து 'ஜெய் பீம்' இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ரஜினியின் 170வது படமாக உருவாகும் இந்த படத்தை லைக்கா தயாரிக்கவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.