ரஜினிகாந்த் - சுபாஷ் கரண் சந்திப்பு... ‘தலைவர் 170’ முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைக்கா !

rajini

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

‘அண்ணாத்த‘ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஜெயில் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

rajini

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் சந்தித்து பேசினார். இதில் லைக்காவின் நிறுவனத்தின் செயல் அதிகாரி திருக்குமரனும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது  லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி, இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. 

ரஜினியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரி, வரும் நவம்பர் 5-ஆம் தேதி ரஜினியுடனான முதல் படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சுபாஷ் கரண், தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்த படத்தை ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இரண்டாவது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். இதில் அதர்வா ஹீரோவாகவும், ரஜினி கெஸ்ட் ரோலிலும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story