ரஜினி - சிவ் ராஜ்குமார் கடும் மோதல்... 'ஜெயிலர்' தரமான அப்டேட் !

jailer

 ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் தரமான அப்டேட் வெளியாகியுள்ளது. 

 நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார் என்பதை அறிவித்தது. 

Jailer

இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவ் ராஜ்குமார், சுனில், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பட்த்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் மற்றும் கன்னட நடிகர் சிவ் ராஜ்குமார் இடையே நடக்கும் சண்டைக்காட்சி ஒன்று பயங்கரமான படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என படக்குழுவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story