புதுச்சேரி ஷூட்டிங்கை முடித்த ரஜினி.. ‘லால் சலாம்’ புதிய அப்டேட்

lal salaam

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தில் பயிற்சியாளராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

lal salaam

இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதோடு பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

lal salaam

லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் மும்பையில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி பஞ்சாலை வளாகத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள துத்திப்பட்டு மைதானம், கோரிமேடு காவலர் மைதானம், லாஸ்பேட்டை மைதானம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 

lal salaam

இந்நிலையில் இந்த படத்தில் புதுச்சேரியில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி நடிக்கும் முக்கிய காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சில காட்சிகளே ரஜினி நடிக்க வேண்டியுள்ளது. புதுச்சேரி படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதை அடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகிறது. விரைவில் படத்தின் புதிய அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம். 

 

Share this story