ரஜினியின் ‘தர்பார்’ தோல்வி ஏன் ?.. முதன்முறையாக மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ் !

ar murugadoss

ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படம் தோல்வி குறித்து முதன்முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனம் திறந்துள்ளார். 

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் திரைக்கதை சொதப்பியதே என்று கூறப்பட்டது. 

ar murugadoss

இந்நிலையில் ‘தர்பார்’ படத்தின் தோல்வி குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார். அதில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் காரணமாக படத்தை ஒரு மாதத்தில் தொடங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோன்று ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டிய தேவையும் இருந்தது. 

ar murugadoss

இதனால் சரியான திட்டமிடல் இல்லாமல் படத்தை தொடங்கினேன். இது என்னுடைய தவறான முடிவு என்று பின்னர் தான் புரிந்துக்கொண்டேன். நான் ரஜினியின் தீவிரமான ரசிகர் என்பதால் அவரின் படத்தை மிஸ் செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் ஒப்புக்கொண்டேன் என்று கூறினார். ஆனால் இந்த படம் வெற்றி பெறாததது ரஜினி ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யதது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story