அடுத்தடுத்து ரஜினி மகள்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் !

soundarya

தனது சொகுசு காரின் சாவி காணவில்லை என்று ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா புகார் அளித்துள்ளார். 

சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் அவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். தந்தையை போன்று இருவருமே சினிமாவில் பணியாற்றி வரும் நிலையில் ரஜினியை வைத்து ‘கோச்சடையான்’ என்ற 3 டி அனிமேஷன் திரைப்படத்தை சௌந்தர்யா இயக்கியுள்ளார். 

soundarya

சௌந்தர்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டினர். 

இந்நிலையில் தனது ரேஞ்ச் ரோவர் கார் சாவியை காணவில்லை என்று பரபரப்பு புகார் ஒன்றை செளந்தர்யா தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தனியார் கல்லூரி சென்றபோது காரின் சாவி காணாமல் போனது என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சௌந்தர்யாவின் அக்கா ஐஸ்வர்யா தனது வீட்டில் நகை திருடு போனதாக கடந்த மார்ச் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

 

Share this story