‘ரொம்ப மனசு கஷ்டமாயிருக்கு’ - ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பால் சோகமான ரஜினி !

rajini

ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் உடலுக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். 

நீண்ட காலமாக ரஜினியின் அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் வி.எம்.சுதாகர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென இன்று மரணமடைந்தார். இந்த செய்தி ரஜினி மற்றும் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

rajini

இதையடுத்து அண்ணாநகரில் உள்ள சுதாகர் வீட்டிற்கு சென்ற ரஜினி, அவரது உடல் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, என்னுடைய நீண்ட கால நண்பராக இருந்தவர் சுதாகர். என்மேல் நிறைய அன்பு, பாசம் வைத்திருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவரின் உடல்நிலை சரி செய்ய பல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

ஆனால் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடன் அவர் பயணித்த நினைவுகள் நிறைய உள்ளது. நான் நன்றாக இருக்கவேண்டும் என்று எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார். நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன் என்று கூறினார். 

 

Share this story