ரஜினியை பேச்சை தட்டாமல் கேட்கும் ரசிகர்கள்.. ‘ஜெயிலர்’ பட ரிலீசில் நடந்த சுவாரஸ்சியம் !

jailer

 ரஜினி சொன்னப்படி மது குடிக்கமாட்டோம் என ரசிகர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரசிகர்கள் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய ரஜினிகாந்த், குடியால் தான் இப்படி இருக்கிறேன். இல்லையென்றால் இதைவிட பல மடங்கு இருந்திருப்பேன் என்று கூறியிருந்தார். 

jailer

இந்நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படம் மதுரையில் 28 திரையரங்குகளில் வெளியானது. காலை 8 மணியிலிருந்து இந்த படத்தை காண ரஜினி ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். இதனால் மதுரை திரையரங்குகள் திருவிழா போன்று ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

அந்த வகையில் மதுரை பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதையொட்டி பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர். அப்போது முன்னாள் காவல்துறை உதவி ஆணையரும், ரஜினி மன்ற நிர்வாகியுமான குமரவேல் தலைமையில் கூடிய ரசிகர் மன்றத்தினர், ‘மது குடிக்க மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்தனர். 

 

 

 

Share this story