வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றார் ரஜினி
ஜெயிலர் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் கூட்டணி அமைத்துள்ள இயக்குநர் த.செ ஞானவேல். சமீபத்தில் படத்தின் தலைப்பு குறித்த டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. ‘வேட்டையன்’ என படத்திற்கு அட்டகாசமாக டைட்டிலை வைத்துள்ளனர்.தொடர்ந்து படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ள. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்
nullSuperstar Rajinikanth from Turicorin airport 💥🔥#SuperstarRajnikanth #Thalaivar#ThalaivarNirandharam #Rajinikanth#Vettaiyan #ThalaivarNirantharampic.twitter.com/5oCBclvBn0
— Kutty Chovan (@KuttyChovan) December 26, 2023
இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையம் சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.