'ஜெயிலர்' 100 நாள் படப்பிடிப்பு நிறைவு... மேக்கிங் வீடியோ வெளியீடு !

'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு 100 நாள் நிறைவுப்பெற்றதை அடுத்து மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், மோகன்லால், சுனில், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், சிவ் ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினிக்காக தரமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 100வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ள ரஜினியின் காட்சிகள் ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
#Jailer Making Video😲💥🔥
— News7Telugu (@news7telugu) March 10, 2023
Pure Goosebumps 😍🤌🥵@rajinikanth
@Nelsondilpkumar pic.twitter.com/44IdVKS2mP