வெறித்தனமான லுக்கில் ஜாக்கி ஷெராப்... ‘ஜெயிலர்’ ஒரு மாஸ் அப்டேட்

jailer

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சூப்பர் ரஜினிகாந்தின் முதல் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது ‘ஜெயிலர்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. பல மொழிகளில் வெளியாகவுள்ளதாக அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் 4 மொழிகளில் உள்ள முக்கிய நட்சத்திரத்தில் இந்த படத்தில் இணைந்து வருகின்றனர். 

Jackie Shroff

ஏற்கனவே மலையாளத்திலிருந்து மோகன்லாலும், கன்னடத்திலிருந்து சிவ ராஜ்குமார், தெலுங்கிலிருந்து ‘புஷ்பா‘ புகழ் சுனில் என அடுத்தடுத்து இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் இருந்து பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளார். இதையொட்டி ஜாக்கி ஷெராப்பின் மிரட்டலான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் விஜய்யின் ‘பிகில்’ படத்தில் வில்லனாக நடித்தவர். 

Jackie Shroff

இதுதவிர இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு. வசந்த் ரவி, விநாயக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பு விரைவில் நிறைவுபெற உள்ளது. 

 

Share this story