ரஜினியுடன் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்... 'ஜெயிலர்' குறித்து மாஸ் அப்டேட் !

jailer

 ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவ் ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  

 jailer

அனிரூத் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. வித்தியாசமான ஜெயில் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இதில் ஒய்புபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இப்படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

Share this story