ஜெயிலர்-ல் இணைந்த 'புஷ்பா' வில்லன்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

jailer

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் 'புஷ்பா' படத்தின் வில்லன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'ஜெயிலர்'. விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிரூத் தாறுமாறாக இசையமைத்து வருகிறார். 

 jailer

இப்படத்தில் மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் விரைவில் மீதமுள்ள படப்பிடிப்பு முடிக்க நெல்சன் வேகமாக பணியாற்றி வருகிறார். 

jailer

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'புஷ்பா' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story