தள்ளிப்போகிறதா ‘ஜெயிலர்’ ரிலீஸ் ?... வெளியானது புதிய அப்டேட் !

jailer

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத், கடலூர் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

jailer

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என கூறப்பட்டு வந்ததது. ஆனால் திட்டமிட்டபடி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக வரும் ஆகஸ்ட் 11-ஆம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், சுனில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story