ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துக்கொண்ட ரஜினி-கமல்; கலக்கும் கிளிக்ஸ்.

photo

ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து தனது நண்பரை தானே போய் பார்க்கிறேன் என ரஜினியை சந்தித்து நப்பை வெளிப்படுத்தியுள்ளார் கமல்.

photo

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இரு நடிகர்கள் கமல், ரஜினி. இருவரின் படங்களுக்கும் போட்டி உண்டு  ஆனால் இவர்களுக்குள் நல்ல நட்பு மட்டுமே எப்போதும் உண்டு. அந்த வகையில் இருவரும் தங்களது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். கமல் ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதேப்போல ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார்.

இருவரின் படங்களும் ஒரே அரங்கில் சென்னையில் ஷூட்டிங் நடந்து வந்துள்ளது. கமல் படப்பிடிப்பில் இருந்ததை அறிந்த ரஜினி அவரை சென்று பார்க்கலாம் என இருந்துள்ளார். அதே போல ரஜினி இருப்பதை அறிந்த கமல், சற்றும் தாமதிக்காமல் நண்பரை நானே வந்து பார்க்கிறேன் என அவரை சந்தித்து ஆரத்தழுவியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.  

Share this story