"நான் எப்பவும் போற ரூட் பத்தி கவலைப்பட்டது கிடையாது".-வித்தியாசமான ரஜினியின் பதிவு
1767407439000
உலகம் முழுவதும் 2026 ஆங்கில புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து சொன்னார். அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை பரிசளித்தார்.
பிறகு தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தனது நடிப்பில் வெளியான ‘முத்து’ என்ற படத்தில் இடம்பெற்ற வீடியோவை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து சொன்னார். சாரட் வண்டியில் ரஜினிகாந்துடன் அமர்ந்துள்ள மீனா, ‘போற ரூட் கரெக்ட்டுதான?’ என்று கேட்கிறார். அதற்கு ரஜினிகாந்த், ‘யாருக்கு தெரியும்? நான் எப்பவும் போற ரூட் பத்தி கவலைப்பட்டது கிடையாது.
ஆண்டவன் மேல பாரத்தை போட்டு, வண்டி எந்த ரூட்டில் போகுதோ, அந்த ரூட்ல போயிட்டே இருக்க வேண்டியதுதான்’ என்று சொல்கிறார். இதுவரை அவர் எந்த வருடமும் இதுபோல் வசனத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து சொன்னதில்லை என்பதால், நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவு குறித்து ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.