விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு புறப்பட்ட நடிகர் ‘ரஜினிகாந்த்’.

photo

நண்பனின் இரங்கல் செய்தி கேட்டு ‘வேட்டையன்’ படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் ரஜினிகாந்த்.

photo

கேப்டன் விஜயகாந்த் கோலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வந்தவர். போலீஸ் அல்லது ராணுவவீரர்  என்றால் எப்படி இருக்க வேண்டும் என 90ஸ் கிட்ஸ்களிடம் கேட்டால் அவர்கள் சட்டென கேப்டன் பெயரைத்தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு படங்களில் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நிலைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி ஷூட்டிங் நடக்கும் போது அனைவருக்கும் சாப்பாடு கிடைக்கவேண்டும் யாரும் பட்டினியாக இருக்க கூடாது, என்பதில் அதிக அக்கறை கொள்வாராம். கேப்டனின் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ எப்போது சென்றாலும் சாப்பாடு இருக்குமாம். அந்த அளவுக்கு நல்ல மனிதராக வலம் வந்த கேப்டன் இன்று காலை இயற்கை எய்தினார்.

photo

அவரது இழப்பு பலராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் உள்ளது. இந்த நிலையில் கேப்டனின் நண்பரான ரஜினிகாந்த், அவரது மறைவு செய்தி கேட்டு நேரில் அஞ்சலி செலுத்த அவர் நடித்து வரும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளாராம். ரஜினிகாந்த இன்று மாலை அல்லது நாளை நேரில் வந்து கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story