சிரஞ்சீவியை ஓரம் கட்டும் ரஜினிகாந்த்.

photo

கோலிவுட்டை கடந்து சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் இவரது அதிரடி ஆக்ஷனில் ‘ஜெயிலர்’ படம் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது.

photo

அதேப்போல அந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா சங்கர்’ படம் நேற்று வெளியானது. அதில் அஜித் நடித்த கதாபத்திரத்தில் சிரஞ்சீவியும் அவரது தங்கை லெட்சுமி மேனன் கதாபத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முதல் நாளில் உலகம் முழுவதும் 33 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பல திரையரங்குகளில் ‘போலா ஷங்கர்’ படத்தை இன்றோடு தூக்கிவிட்டு பதிலாக ‘ஜெயிலர்’ படத்தை திரையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படம் வெளியாகி இரண்டே நாட்களில் 100 கோடி கிளப்பில் படம் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story