ரஜினி, ஷாருக்கான் பட வாய்ப்பை தவிர்த்த புகழ்பெற்ற தொகுப்பாளினி... இது தான் காரணம்...

ரஜினி, ஷாருக்கான் பட வாய்ப்பை தவிர்த்த புகழ்பெற்ற தொகுப்பாளினி... இது தான் காரணம்...

பெப்சி  உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் உமா. அந்த நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து பெப்சி உமாவாக வலம்வர தொடங்கினார். குறிப்பாக அவர் அணிந்து வரும் புடவை, நகைகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சுமார் 15 ஆண்டுகள் உமா நிகழ்சியை தொகுத்து வழங்கினார். வெள்ளித்திரை வாய்ப்புகள் பல வந்தாலும் அதையெல்லாம் நிராகரித்து சின்னத்திரையிலே நீடித்தார். உமா தனது முதல் நிகழ்ச்சி தொகுப்பை அவரது பிளஸ்டூ படிக்கும்போது தூர்தர்ஷனில் மூலமாக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரஜினி, கமல், ஷாருக்கான் மற்றும் கே பாலச்சந்தர் ஆகியோர் படங்களில் வந்த வாய்ப்பை மறுத்ததாக தெரிவித்துள்ளார். நடிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் நடிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறார். 
 

Share this story