46 வருடங்களுக்கு பிறகு நெல்லை வந்துள்ளேன்- நினைவுகளை பகிர்ந்த ரஜினி

46 வருடங்களுக்கு பிறகு நெல்லை வந்துள்ளேன்- நினைவுகளை பகிர்ந்த ரஜினி

நெல்லையில் படப்பிடிப்புக்காக வந்த ரஜினிகாந்த், 46 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நெல்லை வந்துள்ளதாக, பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

46 வருடங்களுக்கு பிறகு நெல்லை வந்துள்ளேன்- நினைவுகளை பகிர்ந்த ரஜினி

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும், நடிகர் நடிகைகள் பெயரை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர். தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி கலைஞர்களும் படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது நெல்லை பக்கம் படக்குழு திரும்பியுள்ளது. நெல்லை பணகுடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அவர், 46 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நெல்லை வந்துள்ளதாக பழைய நினைவுகளை பகிர்ந்தார். மேலும், அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Share this story