அலப்பறை கிளப்பியுள்ள சூப்பர் ஸ்டார்.. 500 கோடி கிளப்பில் இணைந்த ‘ஜெயிலர்‘
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் 525 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான இப்படம் தமிழகத்தை தாண்டி மற்ற மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் முதல் வாரத்தில் 375 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது உலகளவில் 525 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் 500 கோடி கிளப்பில் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.