மாஸான லுக்கில் ரஜினிகாந்த்.. ‘ஜெயிலர்’ புதிய போஸ்டர் வெளியீடு !

jailer

 ‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ் லுக்கில் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தை  நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ஓய்வுபெற்ற ‘ஜெயிலர்’ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 

jailer

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மாஸ் லுக்கில் அந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story