சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் விக்ரம்.. ‘தலைவர் 170’ சூப்பர் அப்டேட்

rajini

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட பணிகள் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

​​rajini

இந்த படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மும்பையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.‌‌ இதையடுத்து ரஜினி தனது 170 படத்தில் நடிக்கவுள்ளார்.  'ஜெய் பீம்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இந்த படத்தை இயக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

rajini

இ‌ந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாக நல்ல கதாபாத்திரம்‌ அது எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் கடினமான உழைப்பை நடிகர் விக்ரம் வெளிப்படுத்துவார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரொம்பவே பிடித்துவிட அவர் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம். இந்த படத்தில் நடிக்க விக்ரமுக்கு லைக்கா 50 கோடி சம்பளம் பேசயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story