ரஜினியின் 170வது படத்தின் இயக்குனர் யார் ?.. லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

thalaivar 170

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தின் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா வெளியிட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் நிறைவுபெற உள்ளது. 

thalaivar 170

இந்த படத்தையடுத்து ரஜினியின் 170வது படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. முதலில் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் கதையில் திருப்தியில்லாததால் வெளியேறினார். இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குவதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

thalaivar 170

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் டிஜே ஞானவேல். அதன்பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இருளர் பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்து பேசிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story