ரஜினியுடன் சில ஆண்டுகள் கழித்து நடிக்கும் பிரபலங்கள்... ‘தலைவர் 170’ மாஸ் அப்டேட் !

thalaivar 170

ரஜினியின் ‘தலைவர் 170’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகர்கள் இருவர் இணையவுள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் விரைவில நடிக்கவுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் டான் படத்தை தயாரித்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் தொடங்கவுள்ளது. 

thalaivar 170

இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகர்கள் வடிவேலு மற்றும் அரவிந்தசாமி ஆகிய இருவரும் இணையவுள்ளனர். ஏற்கனவே ‘தளபதி’ படத்தில் ரஜினிக்கு தம்பி கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார். 

thalaivar 170

இதேபோன்று சந்திரமுகி மற்றும் குசேலன் ஆகிய படங்களுக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து வடிவேலு தற்போது இணையவுள்ளார். வடிவேலு மற்றும் அரவிந்தசாமி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணையவிருப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story