சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் குவியும் நட்சத்திரங்கள்... மிரள வைக்கும் கூட்டணி !

thalaivar 170

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். 

thalaivar 170

இதையடுத்து ரஜினியின் 170வது படத்தை 'ஜெய் பீம்' இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கவுள்ளார்.  முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ளது. அதாவது ‘ஜெய் பீம்‘ படம் போல் இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.

thalaivar 170

போலி என்கவுண்ட்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக நடிக்கிறார். அதனால் இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் திருவனந்தபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க டிஜே ஞானவேல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளதாம். அனால் பல மொழி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். அந்த வகையில் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் மலையாள நட்சத்திரங்கள் பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் இந்த படத்தில் இணையவுள்ளனர். ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story